திங்கள், செப்டம்பர் 03, 2012

ஸ்வீட்.... காரம்....காபி

ஸ்வீட்.... காரம்....காபி
__________________________________________
வழங்குவது நான் தான் ஹி....ஹி....


பர்கர் வித் பென் டிரைவர்



பழைய படங்களை ரசித்து பார்க்கும் நான் சமீபத்தில் டிவி யில் பார்த்த படம் குடும்பம் ஒரு கதம்பம் விசு எஸ்.வி.சேகர் சுகாசினி, நடித்த குடும்ப கதை தான் இருந்தும் யதார்த்தமாய் நகைசுவை கலந்து தந்திருக்கும் விதம் படத்தை ரசிக்க வைக்கிறது. இதில் எஸ்.வி.சேகர் சுகாசினியின் வறுமையை மீறி வெளிப்படும் அந்த அன்னியோன்யம் ரொம்ப பிடிச்சிருந்தது. இதில் என்னை கவர்ந்த டைலாக் வறுமையால் தீபாவளி கொண்டாட முடியாத சுகாசினியை பார்த்து கமலா காமேஷ் சொல்வார் "ஆண்டவன் எல்லாரும் தான் தீபாவளி கொண்டாடனும்னு ஆசைப்படறான் இருந்தும் அவன் கண் பார்வையை மீறி சில பேர் கொண்டாட முடியாம போயிடுது" என்பார் பக்குவமாக ( இந்த உலகத்திலே எல்லாரும் நல்லாருக்கனும்னு தான் ஆண்டவன் ஆசைபடறான் இருந்தும் அவன் பார்வையை மீறி நிறைய பேர் கஷ்டப்படும் படியா போயிடுது )

------

சமீபத்தில் படித்த நாவல் நம் சுஜாதா அவர்களின் உள்ளம் துறந்தவன் இதய மற்று அறுவை சிகிச்சை யை மையமாக கொண்ட நாவல் இது. பெயரிலேயே உள்ளம் துறந்தவன் இருப்பதால் கொஞ்சம் சஸ்பென்ஸ் குறையுது ஆனால் அவரது எழுத்துக்களால் சஸ்பென்ஸ் குறையாமல் விறுவிறுப்பாய் இருப்பது சுஜாதா சுஜாதா தான் என்று சொல்ல வைக்கிறது இந்த புத்தகம் நான் இரண்டே மணி நேரங்களில் தொடர்ச்சியாய் படித்து முடித்தேன் (இறப்பை துறந்த மனிதனாக சுஜாதாவை இறைவன் படைத்திருக்கலாம் )

------

சமீபத்தில் புத்தக கடையில் நான் நின்றிருந்த போது இருவர் அங்கு ஏதோ வாங்க வந்தவர்கள் கடையில் தொங்க விட்டிருந்த செய்திதாள் சுவரொட்டியை பார்த்து " ச்சே பேப்பர் லே இருக்கிற நியூஸ் பார்த்துட்டு ஒரு நல்ல காரியத்துக்கு கூட போக முடியாது டா பேப்பரை பாரேன் ஒரே வெட்டு குத்து கொலை துரோகம் திருட்டு இப்படியாவே இருக்கு என்று பேசி கொண்டார்கள் அவர்கள் சொல்வது நியாயம் தான் என்று புரிந்தது. ஏனெனில் அன்றைய பேப்பர் விளம்பரத்தில் எல்லாம் அப்படி தான் இருந்தது. நான் கடையில் புக் வாங்கி கொண்டு தெருவில் நடக்கையில் பார்க்கிறேன் சற்று முன் பேசி கொண்டவர்கள் இப்போது இருட்டில் தங்கள் டூ வீலரை நிறுத்தி விட்டு சரக்கு அடித்து கொண்டிருந்தார்கள் (இதுக்கு தானா அந்த பீலிங்)

-------

சமீபத்தில் ஊரிலிருந்து நெருங்கிய உறவினர் தம்பதி வந்திருந்தார்கள் இரவு ரயிலில் செல்ல முன் பதிவு கிடைக்கவில்லை என்பதால் உடனே இருவரையும் அழைத்து சென்று மன்னார்குடி எக்ஸ்பிரஸ் சில் அமர வைத்து விட்டு நானும் இன்னொரு உறவினரும் ஓபன் டிக்கெட் கவுண்டர் சென்றோம் டிக்கெட் எடுக்க ( டிக்கெட் எடுத்து செல்வதற்குள் சீட் கிடைக்காது என்பதால் இந்த முன்னேற்பாடு ) பத்து மணி வண்டிக்கு டிக்கெட் கவுன்ட்டரில் நாங்கள் வரிசையில் சேரும் போது மணி எட்டு நாற்பத்தைந்து. சரி ஒன்னேகால் மணி நேரம் இருக்கிறதே கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் நின்றோம். மூன்று கவுன்ட்டரிலும் வரிசை நிறைய இருந்தது. ஒன்பதரை மணி வரை வரிசை கொஞ்சம் தான் நகர்ந்திருந்தது. இடையில் ஏகப்பட்ட பயணிகள் உள்ளே நுழைந்து விடுவதால் வேறு இன்னும் டிலே ஆனது. ட்ரெயின் டைம் 10.00 மணி. பார்த்தோம் இது சரிபட்டு வராது என்று தீர்மானித்து வெளியில் வந்து ஆட்டோ பிடித்து சிந்தாதிரிபேட்டை ரயில் நிலையம் சென்று டிக்கெட் எடுத்து அதே ஆட்டோவில் திரும்பி, ரயில் கிளம்ப போகிறதே இறங்கி விடலாமா என்று டென்சனாய் உட்கார்ந்திருந்தவர்களிடம் டிக்கெட் டை கொடுத்து அவர்களை ரிலாக்ஸ் செய்தோம். ஒன்றரை மணி நேரத்தில் கிளம்பும் ரயிலுக்கு , எவ்வளவு நேரத்திற்கும் முன்பு தான் வந்து டிக்கெட் வாங்க வரிசையில் நிற்பது சொல்லுங்கள். ( ரயிலுக்கு ஒரு டிக்கெட் 84 ரூபாய். டிக்கெட் வாங்கிட்டு வர ஆட்டோ வுக்கு கொடுத்த பணம் 80 ரூபாய் இது எப்படி இருக்கு)

------

என் பையன் ஹர்ஷவர்தன் எனது செல் போனில் கிளிப் ஆர்ட்டில் வரைந்த ஒரு ஓவியம்
உங்கள் பார்வைக்கு



நாட்காட்டியிலிருந்து

நற்செயல் மேலானது தான் அதனினும் மேலானது நல்லெண்ணம்

ஆர்.வி.சரவணன்

வரும்.... வாரா வாரம்

21 கருத்துகள்:

  1. ரயில்வே பயன்படுத்துவதற்கு ஒரு நேக்கு வேணும் நமக்கு அது சரிப்பட்டு வர்றதில்ல.,

    பதிலளிநீக்கு
  2. மகனின் திறமை மேலும் வளர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. பகிர்வுகள் அருமை.
    உங்கள் மகனின் திறமையை வளருங்கள்.

    பதிலளிநீக்கு
  4. உள்ளம் துறந்தவன் இன்னும் படிக்கலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படிங்க மோகன் தலைவர் எழுத்துக்கள் லே படிக்க வெரி இண்டரெஸ்டிங்

      நீக்கு
  5. உங்க பையன் ஓவியம் Classic... வாழ்த்துக்கள்...

    முதல் படம் கலக்கல்... அடைப்புக்குறிக்குள் கருத்துக்கள் அருமை... நன்றி சார்...

    பதிலளிநீக்கு
  6. ஸ்வீட் காரம் காபி படு சுவை.உங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள்.இப்பவே குட்டி பதிவர் ஆரம்பித்து விட்டார்.இனி அவர் வரைந்த படங்களை பதிவு செய்யவே பிலாக் ஆரம்பித்து விடலாம்.

    பதிலளிநீக்கு
  7. அம்சமான தொகுப்பு. ஹர்ஷவர்தனுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. தலைப்பை வித்தியாசமாய் வைத்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  9. அடுத்தடுத்த வாரங்கள் போடும்போது வரிசை எண் (ஸ்.கா.கா.2) போடுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துக்கு நன்றி நிசாமுதீன்
      இந்த தலைப்பு கொஞ்சம் பரவாயில்லை என்று தோன்றியதால் இந்த தலைப்பை வைத்தேன்

      நீக்கு
  10. ஒருவேள குடிக்கப் போறது தான் நல்ல காரியமோ...

    உங்கள் பையமன் வரைந்த கிளிப்ஆர்ட் நல்ல கற்பனை அழகு

    பதிலளிநீக்கு
  11. அனைத்த்தும் கலந்த காக்டெயில் ..
    ரயில்வே சில நேரங்களில் உயிரை எடுத்துவிடும் சார் ..
    சுஜாதா அவர்களின் புத்தகம் படிக்கல இனி தான் ...

    ஹர்ஷாவுக்கு என் வாழ்த்துக்களையும் பாராட்டையும் கூறி விடுங்கள் சார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு நன்றி குமார்
      பையனிடம் சொல்கிறேன்

      நீக்கு
  12. ஹர்ஷவர்தாவுக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவிக்கவும் அனைத்துமே அற்புதமான தகவல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு நன்றி தோழி

      பையனிடம் தங்கள் பாராட்டுக்களை சொல்கிறேன்

      நீக்கு
  13. அருமை தோழரே வாழ்த்துக்கள் வணக்கம் தொடருங்கள்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்