வியாழன், டிசம்பர் 08, 2011

இளமை எழுதும் கவிதை நீ.... 8


இளமை எழுதும் கவிதை நீ.... 8


அத்தியாயம் 8



எனை எதிர்த்து நீயே களமிறங்கினால்
என் போர் உன் வெற்றிக்காகவா என் வெற்றிக்காகவா


உமாவுக்கு அன்று முழுதும் பேரவை தேர்தல் பற்றிய சிந்தனையாகவே இருந்தது அது வரை அப்படி ஒரு எண்ணம் அவளுக்கு இல்லையென்றாலும் சிவாவின் அத்துமீறிய கலாட்டாக்கள் அவள் மனதை ரொம்பவும் ரணப்படுதியிருந்தன

அவனுக்கு எப்படியாவது பதிலடி கொடுக்க வேண்டும் என்று அவள் மனது அலை பாய்ந்த நேரத்தில் தோழி சொன்னதும் நின்னு பார்ப்போமே என்று தோன்றியது தோற்று போயிட்டால் என்ன செய்வது என்ற தயக்கமும் கூடவே இருந்தது. தன் தாயிடம் இது பற்றி கேட்டாள் .

கேட்ட அடுத்த நிமிடம் அவள் தாய், "வம்பை விலை கொடுத்து வாங்கனுமானு சொல்வாங்க நீ சும்மாவே வாங்கறேன்றே வேணாம்மா அதுவும் அவனை எதிர்த்து கண்டிப்பா வேணாம் "என்று சொல்லி விட்டாள்.

"நீ படிக்கிற வேலையை மட்டும் பார்" என்று அவள் தந்தையும் அதையே ஆமோதித்தார்.

அடுத்த நாள் ஹலோ என்ற பெண் குரல் கேட்டு உமா தன் ரூமை விட்டு வெளி வந்தாள். அங்கே வாசலில் கீதா நின்று கொண்டிருந்தாள்


தொடரும்

ஆர்.வி.சரவணன்

The content is copyrighted to kudanthaiyur and may not be reproduced on other websites.


6 கருத்துகள்:

  1. இந்த சிவா, உமா தேர்தல் பரபர..

    எதிர்ப்பார்ப்புகளுடன்...

    பதிலளிநீக்கு
  2. அருமை.
    தொடர்ந்து எழுதுங்கள்.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. நல்லாருக்கு.. தொடருங்க :)

    பதிலளிநீக்கு
  4. எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு தொடரும் போடுகிறீர்கள்....அருமை!

    பதிலளிநீக்கு
  5. சார் எதார்த்தமாய் நகரும் இந்த பாணி மிகவும் ரசிக்கும் படியாய் உள்ளது ...
    நெஞ்சுக்குள் பதியும் இந்த கதை ...வாழ்த்துக்கள் சார்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்