செவ்வாய், மே 24, 2011

விளையாடிய பொழுதுகளில்


விளையாடிய பொழுதுகளில்


அன்பே

சிறுவயதில்

விளையாடிய பொழுதுகளில்

நாம் எங்கு சென்றாலும்

நிலா தொடர்வதை கண்டு

அதிசயித்தோம்


நான் வாசலிலும்

நீ பின் வாசலிலும்

நின்று

நிலவை உற்று

கவனித்தோம்


நிலா

அங்கும் இருந்தது

இங்கும் இருந்தது


இரு பக்கமும் இருப்பதாக

சொல்லி கொண்டதால்

இருவர் சொல்வதும்

பொய்யென்று

சண்டையிட்டு கொண்டோம்


இன்று அதை நினைக்கையில்

நாம் சிரித்து கொள்கிறோம்


நாம் சிரிப்பது இருக்கட்டும்

அன்று

நிலா நம்மை பார்த்தல்லவா

சிரித்திருக்கும்


ஆர்.வி.சரவணன்

**********

ஆடுகளம் படம் பார்த்தேன்
வெற்றி மாறனின் பொல்லாதவன் படம்
பார்த்து விட்டு
ஆடுகளம் படத்தின் மேல்
கொஞ்சம் எதிர்பார்ப்புடன் இருந்தேன்
வெற்றிமாறன் பெயருக்கேற்றார் போல்
வெற்றி களம்
கண்டிருக்கிறார்
படத்தில்தனுஷ் மிக இயல்பாக நடித்திருக்கிறார்
இல்லை இல்லை
கருப்பு வாகவே
மாறியிருக்கிறார்
வாழ்த்துக்கள் தனுஷ் ,வெற்றிமாறன்

ஆடுகளம் படம் பற்றி நான் ஏற்கனவே இடுகையில் குறிப்பிட்டது இது
தேசிய விருதுகளை குவித்திருக்கும் ஆடுகளம் திரைப்பட குழுவினருக்கு
எனது வாழ்த்துக்கள்

**********

4 கருத்துகள்:

  1. உண்மைதான் சார் ..
    பால்யகால நினைவுகளை கண் முன் நிறுத்தி விட்டிர்கள் ...
    மிகவும் ரசித்தேன் ..
    நன்றி ..

    பதிலளிநீக்கு
  2. நினைவுக‌ள் ந‌ல்லாயிருக்குங்க‌....... :)

    பதிலளிநீக்கு
  3. ரசிக்கக் கூடிய அனுபவம்!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்